எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் நடக்கக்கூடாத 'சென்னை தவறுகள்'

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : சென்னையில் இன்று கொரோனா வெறியாட்டம் நடத்துவதற்கு, துவக்கத்தில் அரசு மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளே காரணம். தற்போது மதுரையில் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. பிற தென்மாவட்டங்களிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனினும் நிலைமை இன்னும் கைமீறிப் போகவில்லை என மருத்துவ நிபுணர்கள் ஆறுதல் அளிக்கின்றனர். எனவே சென்னையில் நடந்த தவறுகள் இனி மதுரை உள்ளிட்ட
தென் மாவட்டங்களில் நடக்கக்கூடாத 'சென்னை தவறுகள்'

மதுரை : சென்னையில் இன்று கொரோனா வெறியாட்டம் நடத்துவதற்கு, துவக்கத்தில் அரசு மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளே காரணம். தற்போது மதுரையில் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. பிற தென்மாவட்டங்களிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனினும் நிலைமை இன்னும் கைமீறிப் போகவில்லை என மருத்துவ நிபுணர்கள் ஆறுதல் அளிக்கின்றனர். எனவே சென்னையில் நடந்த தவறுகள் இனி மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடக்கக்கூடாது.


சென்னையில் நடந்த தவறுகள்* கொரோனா அறிகுறியுடன் பரிசோதனைக்கு வருபவர்களிடம், மாதிரிகளை எடுத்த பின் அடுத்த நொடியே அவர்களை தனிமைப்படுத்தாமல் உலவ விட்டது. பரிசோதனையில் 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே அவர்களும், குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
* பலசரக்கு, காய்கறி, ரேஷன் கடைகளை திறந்து விட்டது. மார்க்கெட்களில் கூட்டத்தை அலைமோதவிட்டது. இது தான் தொற்று பரவியதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. வாழ்வாதாரம் என்ற போர்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் சென்னை மக்கள் இப்போது பரிதவிக்கின்றனர்.

* முதன்முதலாக 'லாக்டவுன்' சமயத்திலேயே, வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களை, தைவான் நாடு போல தனிமைப்படுத்தி இருந்தால் தமிழகம் இந்நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது. இந்நடைமுறையை, இப்போதாவது பின்பற்ற வேண்டும். பிறமாவட்டங்களில் இருந்து வருவோரை, கட்டாயத் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தால், உள்ளூர் மக்களிடம் தொற்று பரவவே பரவாது.

* சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கவனமான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை தொட்ட கையாலேயே மற்றவரை தொடுவது, பரிசோதிப்பது, கவச உடை அணியாமல், கையால் தன் உடலை தொட்டுக் கொள்வது ஆகியவை மிகப்பெரிய ஆபத்தான நடவடிக்கை. மிகவும் சிரமமான பாதுகாப்புப் பணியை, வேறு வழியில்லாமல், கவனத்துடனேயே கையாள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

* பாதிப்பு தீவிரமடைந்த துவக்கத்திலேயே அதிகப்படியான பரிசோதனைகள் நடத்தி பாதிக்கப்பட்டோர், அவர்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யாமல் காலம் கடந்த பிறகு தான் அதிக பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால் கொரோனா தொற்றை துரத்தி விடலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
28-ஜூன்-202010:24:49 IST Report Abuse
venkatan தொற்றாளர்,அவ்வாறு கருதப்படுபவர், நலமாக இருப்போர்.. இவர்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்புக்கு உடல் ரீதியான அணுகல் நெறிமுறைகள் என்ன? மருத்துவ மனை,மற்றும் மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்,உபகரணங்கள்,தொற்று ப் பொருட்கள் பாதுகாப்பாக அகற்றம் போன்றவற்றில் உள்ள மணித் அணுக்கம் தவிர்க்க முடியாதது. இன்னும் நீத்தார் அடக்கம் என பல நிலைகளில் நச்சுண்மி சலனத்தை அறவே தவிர்க்க இயலாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X