பறிக்காமல் விடப்பட்ட செண்டு பூ| Dinamalar

பறிக்காமல் விடப்பட்ட செண்டு பூ

Added : ஜூன் 28, 2020
Share
 பறிக்காமல் விடப்பட்ட செண்டு பூ

கம்பம்:தேனிமாவட்டத்தில் சீலையம்பட்டி, கோட்டூர், புலிகுத்தி, அய்யம்பட்டி, கம்பம், சுருளிப்பட்டி, ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடியாகிறது.

சீலையம்பட்டி, கம்பம் ஆகிய ஊர்களில் பூ மார்க்கெட் செயல்படுகிறது. கம்பம் மார்க்கெட்டில் இருந்து தினமும் 50 டன் பூக்கள் கேரளாவிற்கு விற்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பூக்கடைகள், கமிஷன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எனவே விற்பனைக்கு வழியின்றி தோட்டங்களில் மல்லிகை, ரோஜா, செண்டுப் பூக்கள் பறிக்காமல் விடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X