சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய கடைகளுக்கு சீல் வைப்பு: தினமலர் செய்தி எதிரொலி

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

போடி:போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து 82 ஆக உள்ளது. எனினும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சார்பதிவாளர் அலுவலகம், மளிகை, மீன் கடைகள் மற்றும் சில இடங்களில் டீ கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.

முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, நகர்நல அலுவலர் ராகவன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், லெனின், டி.எஸ்.பி., பார்த்திபன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதில் விதிமுறை மீறி திறந்து வைத்த பேக்கரி, டிபார்ட்மெண்டல், பேன்சி, ஜவுளி, டீக்கடைகள் உட்பட 12 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். முககவசம் அணியாதது, சமூக இடைவெளி, விதிமுறை பின்பற்றாதது என 59 பேரிடம் ரூ.8 ஆயிரத்தி 820 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.கூடலுார்: கூடலுாரில் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மெயின்பஜார், எல்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மளிகை மற்றும் காய்கறி கடைளில் முகக்கவசம் அணியாமல் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியுடனும், அறிவிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X