சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டேங்கர் டிராக்டர்களில்  தண்ணீர் விற்பனை 'ஜோர்'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பகுதியில் டேங்கர் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டிபட்டி பகுதியில் குறைவான மழையால் குளங்கள், கண்மாய்களில் நீர் தேங்கவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துஉள்ளது. சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருந்த கிணறுகள், போர்வெல்களில் போதுமான நீர் சுரப்பு இல்லாததால் ஓட்டல்கள், டீக் கடைகள், கட்டுமான பணிகள் இவற்றிற்கு போதுமான நீர் கிடைக்கவில்லை. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

டிராக்டர் மூலம் டேங்கரில் கொண்டு வரப்படும் மூன்று ஆயிரம் லிட்டர் நீர் துாரத்திற்கு தக்கபடி ரூ. 800 முதல் 1500 வரை விற்கப்படுகிறது. தண்ணீர் தேவையை சாதகமாக்கிக்கொண்ட சிலர் நிலத்தடி நீரை உறிஞ்சி வியாபாரமாக்கி விட்டனர். இந்த விற்பனை குறித்து வருவாய்த்துறை, கனிம வளத்துறையினர் கண்டு கொள்வதில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X