'இ பாஸ்' வழங்க எதிர்ப்பு குமுளியில் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

குமுளி:ஒரு நாள் 'இ பாஸ்' வழங்க எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் குமுளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகப்பகுதியில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு சென்று வரும் வகையில் ஒரு நாள் 'இ பாஸ்' வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழக ஏல விவசாயிகள் தங்களது ஏலத்தோட்டங்களுக்கு சென்று திரும்பி வந்தனர். கடந்த சில நாட்களாக இந்த பாஸ் வழங்குவதிலும் கெடுபிடியாக இருந்ததால் அவர்கள் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் அங்கிருந்து இ பாஸ் பெற்று இடுக்கி மாவட்டத்திற்கு வரும்போது தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கேரள பாதுகாப்பு அமைப்பு சார்பில் புகார் தெரிவித்தது. ஒரு நாள் இ பாஸ் வழங்குவதையும் முற்றிலும் நிறுத்த வேண்டும் என அதன் தலைவர் ஹாரிம் முட்டம் தலைமையில் குமுளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இது குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவிப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X