பொது செய்தி

தமிழ்நாடு

தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு தடை வருமா?

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:'உழவர்சந்தை மற்றும் தென்னம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்,' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூரில் வசிப்போருக்கு தேவையான காய்கறிகள் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் விற்கப்படுகிறது. பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட், தினசரி மார்க்கெட்டிலும் ஐந்து டன்னுக்கு அதிகமாக காய்கறி விற்பனை நடக்கிறது.தற்காலிகமாக உழவர் சந்தை இரு இடங்களில் மாற்றியமைக்கப்பட்ட போதும் வாடிக்கையாளர், கூட்டம் குறைந்தபாடில்லை. சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒரே நாளில் பத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறவர் திருப்பூரில் கண்டறியப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று பரவலை தடுக்க, 'பொது இடத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும்; சமூக இடைவெளி கடைபிடித்து, முககவசம் அணிய வேண்டும்,' என, சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.அருகிலுள்ள ஈரோடு மாநகராட்சியில் சில்லறை விற்பனைக்கு அம்மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மொத்த வியாபாரிகள் மட்டுமே காய்கறி வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூர் உழவர் சந்தை, மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு தடைவிதித்து, மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிடில், தொற்று பரவல் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X