பொது செய்தி

தமிழ்நாடு

குட்டீஸ்களுக்காக அழகிய முக கவசம் தயாரிப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 குட்டீஸ்களுக்காக அழகிய முக கவசம் தயாரிப்பு

திருப்பூர்:சிறுவர்களை கவரும் வகையில், கார்ட்டூன் காட்சிகள் பொறிக்கப்பட்ட முக கவசங்கள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.கொரோனா பரவலை தடுப்பதற்கு, மக்கள் அனைவரும் முக கவசம் அணிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பல்வேறு தேவைகளுக்கு வெளியே செல்லும்போது, எல்லோரும் முக கவசம் அணிந்துகொள்கின்றனர்.பெரியவர்களை பொருத்தவரை தங்களுக்கு பொருத்தமான முக கவசங்களை வாங்கி அணிந்துகொள்கின்றனர். சிறுவர்கள், முக கவசம் அணிவதை விரும்புவதில்லை. முக கவசம் அணிய மறுத்து அடம்பிடிப்பது; அணிவிக்கும் முக கவசத்தை, கழற்றி வீசுவதால், பெற்றோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதற்கு தீர்வாக, திருப்பூர் நிறுவனங்கள், குழந்தைகளை கவரும்வகையிலான முக கவசம் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. எல்லா குழந்தைகளும், ஏதேனும் ஒரு கார்ட்டூனை விரும்பி பார்க்கின்றனர்.இதை அடிப்படையாக வைத்து, சோட்டா பீம், ஜங்கிள் புக், லிட்டில் சிங்கம், டோரா புஜ்ஜி, மோட்டு பட்லுா, வருத்தப்படாத கரடி சங்கம் போன்ற கார்ட்டூன்களில் உள்ள, காட்சிகள், பீம், சுட்கி, காளியா, ஜக்கு, கரடி குட்டி, சிங்கம் போன்ற கதாபாத்திரங்களை தனித்தனியாக, முக கவசத்தில் பிரின்டிங் செய்கின்றனர். தங்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை பார்க்கும் சிறுவர்கள், விரும்பி வாங்கி, முக கவசங்களை அணிந்து கொள்கின்றனர்.பெற்றோர்களும், தங்கள் குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் காட்சி இடம்பெற்றுள்ள, நான்கு முதல் ஐந்து முக கவசங்களை வாங்கி வைத்து கொள்கின்றனர். குழந்தைகளின் பிடித்ததை, மாற்றி மாற்றி அணிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X