பொது செய்தி

தமிழ்நாடு

பேட்டரி வாகனம் வழங்க ஊராட்சியில் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 பேட்டரி வாகனம் வழங்க ஊராட்சியில் எதிர்பார்ப்பு

பல்லடம்:பேட்டரி வாகனம் வழங்க வேண்டும் என, பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், குப்பை அள்ளும் பணியை எளிமையாக்க வேண்டி, பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 11 ஊராட்சிகளுக்கு, சமீபத்தில் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தருவிக்கப்பட்டன.ஒன்றியத்திலுள்ள, 20 ஊராட்சிகளில், மக்கள் தொகை அடிப்படையில், பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டதாக, ஒன்றிய அதிகாரிகள் கூறினர். அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.குறைந்த கூலி, வேலைப்பளு காரணமாக, துப்புரவு வேலை பார்க்க யாரும் முன்வருவதில்லை. இதனால், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் மூலம், குப்பை அள்ளும் பணி மேற்கொண்டால், வேலை குறைவதுடன், குறைந்த ஆட்களே தேவைப்படுவர்.எனவே, அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகங்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X