பொது செய்தி

தமிழ்நாடு

சீமைக்கருவேல மரம் அகற்றம்: தன்னார்வலர்களின் சேவை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 சீமைக்கருவேல மரம் அகற்றம்: தன்னார்வலர்களின் சேவை

பல்லடம்:பல்லடம் அருகே, சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியில், தன்னார்வலர்கள் சேவையாற்றி வருகின்றனர்.பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளில் உள்ள குளம் குட்டைகளில், சீமை கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. தன்னார்வலர்கள் பங்களிப்புடன், சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் இதை செயல்படுத்தி வருகிறது.இது குறித்து, தன்னார்வலர்கள் கூறியதாவது:கரைப்புதுார் ஊராட்சியில் பாச்சாங்காட்டுபாளையம் - குன்னாங்கல்பாளையம் ஓடை, ஏ.டி., காலனி - சின்னக்கரை பாலம், ஆர்.எம்., நகர் மயானம், காவேட்டிரங்கன் புதுார் - வீரபாண்டி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம்புதுார் ஓடை முதல் குங்கும பாளையம் ஓடை வரை இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.கரைப்புதுார் ஊராட்சி குப்பிச்சிபாளையம், நொச்சிபாளையம், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், மற்றும் உகாயனுார், பொல்லிகாளிபாளையம், எம்.ஜி.ஆர்., நகர் ஓடைகளிலும், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி விரைவில் நடக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X