தமிழ்நாடு

அதிகரிப்பு: கொரோனாவால் போலீசார் பாதிக்கப்படுவது: குடும்பத்தினருக்கும் பரவுது தொற்று

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தேனி: மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரவுவது அதிகரித்து உள்ளது. இதனால் அச்சத்தில் உள்ள அவர்கள் கூடுதல் கண்காணிப்பு, சிகிச்சை அளிக்க வலியுறுத்துகின்றனர்.

மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுக்கள், எஸ்.ஐ.,க்கள், அவர்கள் குடும்பத்தினர் 9 பேர் என 32 பேர் , ஒரு ஊர்க்காவல்படை வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஓடைப்பட்டி கோவிட்19 கேர் சென்டர், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர், சிறுமியரும் உள்ளனர்.மாவட்டம் முழுவதும் 3 பிரிவுகளாக சுழற்சி முறையில் நோய் தடுப்புப்பணியில் 2 ஆயிரம் போலீசார் பணிபுரிந்த நிலையில் தொற்று காரணமாக பணிகள் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படுவதால் போலீசார் சோர்ந்து விடுகின்றனர்.

ஏற்கனவே பாதுகாப்பை உறுதிப்படுத்த எஸ்.பி., ஹைட்ரோ குளோரோக்சி குயின் மாத்திரைகளையும், 47 ஸ்டேஷன்கள், பரிசோதனைகள் மையங்களில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் 'பல்ஸ் ஆக்சி' மீட்டர், முழுக்கவச உடைகளை வழங்கியுள்ளார்.

எனினும் தொற்று ஏற்பட்டவர்களை கூடுதல் கவனம் செலுத்தி தனியாக மருத்துவமனை யிலோ அல்லது ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கல்லுாரிகளுக்கோ மாற்றி சிகிச்சை அளித்து விரைந்து குணப்படுத்த வேண்டும் என, பாதிக்கப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் துணை முதல்வர், கலெக்டர், எஸ்.பி.,க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X