பொது செய்தி

தமிழ்நாடு

சித்தா சிகிச்சையில் 369 பேர் நலம்

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சித்தா சிகிச்சையில் 369 பேர் நலம்

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 369 பேர், சித்தா மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்; 202 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின் அடிப்படையில், அவர்களுக்கான சிகிச்சைஅளிக்கப்படுகிறது.

அலோபதி மருத்துவ சிகிச்சையுடன், நம் பாரம்பரிய சித்த மருத்துவ முறையில், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகின்றன. இவை நோயாளிகளுக்கு நல்ல பலனை அளித்த நிலையில், தனித்த சித்தா சிகிச்சை பெறும் வசதியையும், மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது.அதன்படி, சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லுாரியில், 250 படுக்கை வசதியுடன் கூடிய, கொரோனா தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில், சித்தா டாக்டர் வீரபாபு தலைமையிலான குழுவினர், சிகிச்சை அளித்து வருகின்றனர். இம்மாதம், ௪ம் தேதியில் இருந்து, இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சையில், 369 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து, டாக்டர் வீரபாபுகூறியதாவது:சித்த மருத்துவ மையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு, பாதிப்புக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், சளி, வாந்தி, பேதி, இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதற்குரிய கஷாயங்கள், மருந்துகள்வழங்கப்படுகின்றன.அது தவிர, கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், மூலிகை தேநீர், துாதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய சுண்டல் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.நல்ல காற்றோட்டமும், இயற்கை சூழலும், சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமாக வழிவகுக்கிறது. இதுவரை, 369 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 202 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும், விரைந்து குணமடைந்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
28-ஜூன்-202013:52:19 IST Report Abuse
SUDHAKAR சித்தா ஆயுர்வேதா சிகிச்சையில் மிதமான மற்றும் சீசனை அறிகுறி உள்ள நோயாளிகை சரிசெய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள் அதை வெகு தீவிரமாக எல்லா இடங்களிலும் கையாண்டால் நோயின் தாக்கத்தை வெகுவாக குறைக்க முடியும். மேலும் எல்லா பகுதி மக்களுக்கும் இதை தடுப்பு மருந்தாக கொடுக்கலாம் அதை அரசாங்கம் தான் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் பல இடங்களில் எந்த செக்க்கப்போ மருந்தோ தரவில்லை இப்படி எதனை இடங்கள் விட்டு போயிருக்கிறது என தெரியாது.அரசாங்கம் சற்று கடுமையாகவும் நேர்மையாகவும் நடவடிக்கை எடுத்தால் ஒரு மாதத்தில் வைரஸை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.
Rate this:
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
28-ஜூன்-202006:00:02 IST Report Abuse
Dr.T.Senthilsigamani சித்தா சிகிச்சையில் 369 பேர் நலம் .மிக மிக நல்ல செய்தி .மத்திய மோடிஜி அரசும் மற்றும் மாநில அரசுகளும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு எதிராக ,அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ,நம் பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் சிகிச்சைகளை மேற்கொள்ள விரிவான திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்த வேண்டும் .சீக்கிரமே கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை வருமுன் காத்திட சித்த மருத்துமுறைகளை அனைத்து மாநிலங்களும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .அதனை எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X