பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்கூட்டம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணி குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ரவீந்திரநாத் எம்.பி., கலெக்டர் பல்லவிபல்தேவ்,சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., பங்கேற்றனர்.518 தொழில்முனைவோர்கள், வறுமை ஒழிப்புச் சங்கத்தின் 243 மாற்றுத்திறன் பயனாளிகள், நலிவுற்ற தொழில் முனைவோர்கள் என, 761 பேருக்கு ரூ.157.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

துணை முதல்வர் பேசுகையில் மாவட்டத்தில் 513 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் படுக்கைவசதிகளுடன் போடி அரசு பொறியியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி தனியார் கல்லுாரியில் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது'', என்றார். கம்பம் ஜக்கையன் எம்.எல்.ஏ.,மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ்,திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X