அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க.,

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
AIADMK, Tamil Nadu, assembly election, tn election, tn govt


கோவை :வரும், 2021, மே மாதம் நடைபெற உள்ள,தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது.'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு பணியை ஆய்வு செய்யும் போர்வையில், மாவட்டம் வாரியாக செல்ல துவங்கியுள்ள, முதல்வர் பழனிசாமி, மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.

ஏனெனில், தற்போதைய அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2021, மே மாதம் முடிகிறது. மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்பதால், இன்னும், 10 மாதங்களே இருக்கின்றன. 2021, ஜன.,யில், புதிய வாக்காளர் பட்டியல் தயாராகி விடும். தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியிட்டால், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அதன் பின், எவ்வித அறிவிப்பும் வெளியிட முடியாது. அதிகாரிகளும், தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து விடுவர்.அதன் காரணமாக, அ.தி.மு.க., அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய திட்டங்களை, வரும் டிச.,க்குள் துவக்கி, அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்க திட்டமிட்டுள்ளது.


latest tamil news
அதற்காக, 'கொரோனா' வைரஸ் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதுபோல், மாவட்டம் வாரியாக, ஆய்வை துவக்கியிருக்கிறார், முதல்வர் பழனிசாமி.சமீபத்தில் கோவையிலும், திருச்சியிலும்,'கொரோனா' தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர், விவசாயிகள் சங்க பிரமுகர்களை அழைத்து, வேளாண்மை சிறக்க, தமிழக அரசு செய்துள்ள பணிகள், இனி செயல்படுத்த உள்ள திட்டங்களை பட்டியலிட்டார்.

நொய்யல் ஆறு நீர் வழித்தடங்கள், குளங்களை சீரமைக்க, 230 கோடி ரூபாய் ஒதுக்கி, பணியை துவக்கியிருப்பதை, தவறாமல் சுட்டிக் காட்டினார்.மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கனவான, அவிநாசி - அத்திக்கடவு திட்டம், 2021, டிசம்பரில் முடியும் என உறுதி கூறிய அவர், விடுபட்ட பகுதிகளை சேர்த்து, இரண்டாவது திட்டம் செயல்படுத்த, அரசு பரிசீலித்து வருவதாக, உறுதியளித்தார்.

இது, விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டல விவசாயிகளை, தங்கள் பக்கம் ஈர்க்க, இவ்விரு 'மெகா' திட்டங்களும் போதுமென நினைக்கிறார்.அதன் பின், மகளிர் சுய உதவி குழுவினரை அழைத்து, தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார். கடைசியாக, தொழில்துறையினரை சந்தித்தார். சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கிய கடனுதவி, மூன்று மாதம் மின் கட்டணம் தள்ளுபடி உள்ளிட்டவற்றை விளக்கிய முதல்வர், தொழில்துறையினர் கோரிக்கையை பொறுமையாக கேட்டறிந்தார்.முன்னதாக, கோவை மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நட்டு, துவக்கி வைத்தார். தற்போது நடந்து வரும் பணிகளை, பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். தேர்தலுக்கு அச்சாரமாக, இப்போதே பணிகளை வேகப்படுத்தி, பிள்ளையார் சுழி இட்டுச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க.,வினரிடம் கேட்டபோது, 'கொரோனா தடுப்புப் பணி இன்னும் சில மாதங்கள் தொடரும் போலிருக்கிறது. 2021 துவங்கி விட்டால், கட்சியை பலப்படுத்தி, தேர்தலுக்கு தயாராக வேண்டும். அதற்கு முன், அரசின் சாதனை திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும். தமிழகத்துக்கு என்னென்ன வளர்ச்சி பணிகள் செய்துள்ளோம்; ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை, மக்களிடம் கொண்டு செல்ல, இப்போதே பணிகளை வேகப்படுத்தி வருகிறார். ஆட்சிக்காலம் முடிவதற்குள் பல்வேறு பணிகள் முடிவுற்று, பயன்பாட்டுக்கு வந்து விடும். இது, மக்கள் மத்தியில், தமிழக அரசுக்கு நற்பெயரை பெற்றுத் தரும் என, முதல்வர் நம்புகிறார். தேர்தல் சமயத்தில், மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் வாய்ப்பாக இருக்குமென நினைக்கிறார்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
28-ஜூன்-202012:13:32 IST Report Abuse
நிலா தேர்தல் நடக்க கொரோனா விடுமா? நம்பிக்கையில்லை ஒட்டு போட நாம் இருப்போமா?
Rate this:
Cancel
smoorthy - bangalore,இந்தியா
28-ஜூன்-202011:57:52 IST Report Abuse
smoorthy ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது குதிரை கொம்பு என சொல்லலாம்/ஏன் என்றால் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது நடுத்தர அல்லது எந்த கட்சியியும் சாராதவர்கள் வோட்டு தான் / கொரோனா விபத்தில் மிகவும் பாதிக்க பட்டவர்கள் இவர்கள் தான் / சொந்த வீட்டுக்கு கூட போக முடியாதபடி லோக்கடவுன் என்ற பெயரில் வாட்டி வடித்து விட்டார்கள் / இது பெரிய பலவீனம் ஆகும் / சிந்திக்க வேண்டிய விஷயம் கூட /
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
28-ஜூன்-202009:43:24 IST Report Abuse
aryajaffna 'சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்துமளவிற்கு நிகழ்ந்த போலிஸாரின் 'லாக்கப் அத்துமீறல்' காவல் துறையின் மாண்பைக் குறைக்கும் செயல். 'இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்'என்று கடந்து செல்ல முடியாது.'' ''போலீஸாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்.'' Image caption சிறையில் இறந்த தந்தை மகன். ''நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பரிசோதிக்காமல்,'இயந்திர கதியில்' சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை.'' ''இத்தகைய 'கடமை மீறல்' செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம்'அதிகார அமைப்புகள்' காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற 'துயர மரணங்கள்' ஒரு வகையான"திட்டமிடப்பட்ட குற்றமாக' (organised crime) நடக்கிறது.'' என கூறியுள்ளார். சமூகத்தின் மனசாட்சி மேலும் அவர். ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால், போலீஸாரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், 'போலிஸாரை எதிர்த்தால் என்ன நடக்கும்' என்பதற்கான வாழும் சாட்சியாகி இருப்பார்கள்.''
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X