சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகருக்குள் சீறிப்பாயும் வாகனங்களால் ஆபத்து

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகருக்குள் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் விபத்து ஏற்படுகிறது.

ஒட்டன்சத்திரத்தைக் கடந்து தினந்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள், லாரிகள், கார்கள் சென்று வருகின்றன. நகர எல்லைப் பகுதிக்குள் குறைந்த அளவு வேகத்தில்தான் வாகனங்களை இயக்க வேண்டும் என விதிமுறை இருந்த போதிலும் அதனை யாரும் பின்பற்றுவதில்லை.நகர எல்லையான செக்போஸ்ட் மேம்பாலம் முடிந்தவுடன், வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்க வேண்டும்.

அவ்வாறு செல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பாதசாரிகள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இதில் ஒருசில உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாகன ஓட்டிகளோ, போலீசோ அதை கண்டு கொள்வதே இல்லை. ஒட்டன்சத்திரம் நகருக்குள் வாகனங்களை குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே இயக்குவதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X