தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை பெறும் போலீசாருக்கு எச்சரிக்கை டாக்டர் அறிவுரையை மீறினால் நடவடிக்கை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
  கொரோனா சிகிச்சை பெறும் போலீசாருக்கு எச்சரிக்கை  டாக்டர் அறிவுரையை மீறினால் நடவடிக்கை

மதுரை : மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் மருத்துவமனை வளாகத்தில் வலம் வருவதால் மற்றவர்களுக்கு தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் போலீசாருடன் லேசான அறிகுறி உள்ள போலீசார் வீடுகளில் டாக்டர்கள் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். இதில் சிலர், மருத்துவமனை வளாகம், வீட்டுப்பகுதிகளில் சுற்றி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையறிந்த கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,'' தனிமைப்படுத்தப்பட்டுள்ள, சிகிச்சையில் உள்ள போலீசாரில் சிலர் டாக்டர்களின் அறிவுரையை மீறி வெளியே வருவதாக புகார் எழுந்துள்ளது.
அவர்கள் மீது துறை ரீதியான, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் அரசு வழங்கும் நிதியில் இருந்து 14 வகையான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி முகக்கவசம், கிருமிநாசினி, சத்து மாத்திரை, முகத்தை மறைக்கும் கவசம், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், கையுறை உள்ளிட்டவற்றை போலீசார் பயன்படுத்தி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சையில் உள்ளோர் 51 பேர்
மதுரை நகர் போலீசார் - ஆண் 31, பெண் 6
பிற மாவட்ட போலீசார் - ஆண் 1, பெண் 2
போலீஸ் குடும்பத்தினர் - ஆண் 1, பெண் 1,
குழந்தைகள் 6 ரயில்வே ஊழியர்கள் - 3

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X