மியாவாக்கியில் 30 ஆயிரம் மரக்கன்று! குறுங்காடு உருவாக்க, சிறுதுளி முயற்சி| Dinamalar

தமிழ்நாடு

'மியாவாக்கி'யில் 30 ஆயிரம் மரக்கன்று! குறுங்காடு உருவாக்க, 'சிறுதுளி' முயற்சி

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (3)
Share
கோவை:கோவை, ஒண்டிபுதுார் அருகே ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், 'மியாவாக்கி' முறையில், 30 ஆயிரம் மரக்கன்று நட்டு, குறுங்காடு உருவாக்கும் பணியில், 'சிறுதுளி' அமைப்பு ஈடுபட்டுள்ளது.கோவையில் உள்ள மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தனியார் நிறுவனத்தினரை, ஒரே கூரையில் இணைத்து, 'சிறுதுளி' அமைப்பு, குளம், குட்டைகளை துார்வாரியது; தடுப்பணைகளை
 'மியாவாக்கி'யில் 30 ஆயிரம் மரக்கன்று! குறுங்காடு உருவாக்க, 'சிறுதுளி' முயற்சி

கோவை:கோவை, ஒண்டிபுதுார் அருகே ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், 'மியாவாக்கி' முறையில், 30 ஆயிரம் மரக்கன்று நட்டு, குறுங்காடு உருவாக்கும் பணியில், 'சிறுதுளி' அமைப்பு ஈடுபட்டுள்ளது.
கோவையில் உள்ள மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தனியார் நிறுவனத்தினரை, ஒரே கூரையில் இணைத்து, 'சிறுதுளி' அமைப்பு, குளம், குட்டைகளை துார்வாரியது; தடுப்பணைகளை உருவாக்கியது.பருவம் தவறாமல் மழை பெய்ய வேண்டுமெனில், மரங்கள் அவசியம் என்பதால், காலியிடங்களில், 'மியாவாக்கி' முறையில், குறுங்காடு உருவாக்கும் பணியையும், 'சிறுதுளி' செய்து வருகிறது.
அண்ணா பல்கலை வளாகத்தில், 80 ஆயிரம், பாரதியார் பல்கலை வளாகத்தில், 10 ஆயிரம், சி.ஆர்.பி.எப்., வளாகத்தில், 9,000 மரக்கன்றுகள் நட்டு, குறுங்காடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.அடுத்த முயற்சியாக, ஒண்டிபுதுாரில், ரயில்வேக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலத்தில், 'மியாவாக்கி' முறையில், 30 ஆயிரம் மரக்கன்று நட உள்ளது. அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி, புதர் மண்டி கிடந்தது.
பொக்லைன் இயந்திரங்களால், சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.முதல்கட்டமாக, ஜூலை இறுதியில், 10 ஆயிரம் மரக்கன்று நடப்படுகிறது. பின், படிப்படியாக, நடப்படும். அருகாமையில் உள்ள பள்ளத்தில் ஓடும் கழிவு நீரையே, இயற்கை முறையில் சுத்திகரித்து, மரக்கன்றுகளுக்கு பாய்ச்சவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்று நடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.'ஆக்சிஜன் தொழிற்சாலை உருவாகும்''சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:ஒண்டிபுதுாரில், ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், கட்டட கழிவுகள், குப்பை கொட்டப்பட்டிருந்தது. தொடர் முயற்சியால், ரயில்வேயிடம் அனுமதி பெறப்பட்டு, சுத்தம் செய்து வருகிறோம். மிகப்பெரிய சவாலான வேலையாக இருக்கிறது. இருகூர் பகுதியில் நொய்யலில் கலக்கும் பள்ளம், இவ்வழியாக செல்கிறது. அதில், கழிவு நீர் ஓடுகிறது.
இயற்கை முறையில் நீரை சுத்திகரித்து, பரீட்சார்த்த முறையில், மரக்கன்றுகளுக்கு பாய்ச்ச திட்டமிட்டுள்ளோம். மரக்கன்று நடுவதோடு, பராமரிப்பு முக்கியம். அதனால், தலா, 3,000 மரக்கன்றுகளாக, தொகுப்பு, தொகுப்பாக நட இருக்கிறோம்.மரக்கன்று நடுவதற்கு, அமெரிக்காவில் உள்ள, 'ஹோம் ஆப் ஹோப்' அமைப்பை சேர்ந்த மினாள், ஒண்டிபுதுார் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி, ரவுண்ட் டேபிள் ஸ்பார்க் ஆகிய அமைப்புகள் நிதியுதவி செய்கின்றன. ஒண்டிபுதுாரில், 'மியாவாக்கி' முறையில் வளர்க்கும் இம்மரங்களால், ஆக்சிஜன் தொழிற்சாலை உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X