சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்றாளரின் குமுறல் வீடியோ

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துவக்கத்தில் கொரோனா வார்டுகளில் குறைவான நபர்கள் இருந்ததால் அனைத்து வசதிகளும் கிடைத்தது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க முறையாக உணவு கிடைப்பதில்லை, சுகாதார கேடும் உள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து, பாதிக்கப்பட்ட ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் ஆகிறது. இங்கு வழங்கும் உணவு முறையாக இல்லை. கபசுர குடிநீர் 2 நாட்களாக தரவில்லை. கடமைக்கு வேலை செய்கின்றனர். எந்த குறையையும் தெரிவியுங்கள் எனக் கூறும் மருத்துவமனை நிர்வாகம், பலமுறை கூறியும் எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை. கொரோனா வார்டுக்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்துகின்றனர். கழிப்பறை வசதிகள் இல்லை. ஆண், பெண்களுக்கு தனி வார்டுகள் இல்லை. சுகாதாரம் பராமரிக்காததால் அச்சமாக உள்ளது. வீடுகளிலேயே தனிமைப்படுத்தி இருந்தால் நிம்மதியாக இருந்திருப்போம், என்று குமுறியிருந்தார்.

சுகாதாரமாக இருங்கள், ஆரோக்கிய உணவுகளை பகிருங்கள் என அரசு மீண்டும், மீண்டும் வலியுறுத்தும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளால் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X