சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிசை மாற்று வாரிய ஊழியருக்கு 'கொரோனா':கோவையில் அலுவலகம் மூடல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 குடிசை மாற்று வாரிய ஊழியருக்கு 'கொரோனா':கோவையில் அலுவலகம் மூடல்

கோவை;கோவை, குடிசை மாற்று வாரிய ஊழியருக்கு, 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அலுவலகம் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. ஜூலை, 10 வரை, அலுவலகத்துக்கு பொதுமக்கள் வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த திங்கட்கிழமை, கோவை முத்தண்ணன் குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் சென்றிருந்தனர்.
இ.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., தனது ஆதர வாளர்களுடன் வந்திருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு தொற்று உறுதியானதால், செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், 9 பேர், 'கொரோனா' பரிசோதனை செய்தனர். அதில், ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், 108 ஆம்புலன்சில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.அலுவலகம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குடிசை மாற்று வாரிய அலுவலகம் மூடப்பட்டு, ஜூலை, 10 வரை, பொதுமக்கள் வர, தடை விதிக்கப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர், அலுவலகத்தில் பணிபுரிந்ததால், மற்ற ஊழியர்களுக்கு மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர், நேற்று, சளி மற்றும் ரத்த மாதிரி சேகரித்தனர்.தனிமை பகுதிகள் எவை?கணபதி நேரு நகர், ஒலம்பஸ், ராமநாதபுரம் சுப்பையன் தேவர் வீதி, ஒண்டிபுதுார் சாஸ்திரி நகர், ரத்தினபுரி, விஸ்வநாதபுரம், வீரபாண்டி பிரிவு,சுந்தராபுரம் அன்னை இந்திரா நகர், காரமடை கண்ணார்பாளையம், புதுப்பாளையம், கே.கே.புதுார் காளியப்பன் வீதி, காமராஜர்வீதி, கோவில்மேடு, இருகூர் காமாட்சிபுரம், காந்திபுரம் பட்டேல் வீதி, அசோகபுரம், செல்வபுரம் தெலுங்கு வீதி, சண்முகராஜபுரம் ஆகிய பகுதிகளில், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளில், ஸ்டிக்கர் ஒட்டும் பணியில், மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியை தனிமைப்படுத்தி, வேறு நபர்கள் செல்லாத அளவுக்கு மறைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X