மக்காச்சோளம் இறக்குமதியால் கறிக்கோழி தொழிலுக்கு ஆறுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளம் இறக்குமதியால் கறிக்கோழி தொழிலுக்கு ஆறுதல்

Added : ஜூன் 28, 2020
Share

பல்லடம்:நம் நாட்டுக்கு, ஐந்து லட்சம் டன் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.'அமெரிக்கன் படைப்புழு' நோய் தாக்குதலால், கடந்த காலங்களில், நாடு முழுவதும் மக்காச்சோளம் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், மக்காச்சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலையும் அதிகரித்து வந்தது.கறிக்கோழிக்கு முக்கிய தீவனமாக மக்காச்சோளம் விலை உயர்ந்து, கறிக்கோழி உற்பத்தி தொழிலும் பாதிக்கப்படுகிறது. இச்சூழலில், ஐந்து லட்சம் டன் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி கண்ணன் கூறுகையில், ''மக்காச்சோளம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும், 15 சதவீத இறக்குமதி வரி சலுகை அளிக்கப்படும் எனவும், மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், விலை கட்டுக்குள் இருப்பதுடன், தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும். மத்திய அரசின் இந்த அறிவிப்பு, இக்கட்டான நிலையில் உள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X