பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ப்பு நாய்களை தாக்கும் 'பார்வோ': உடனே தடுப்பூசி போடுங்க

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 வளர்ப்பு நாய்களை தாக்கும் 'பார்வோ': உடனே தடுப்பூசி போடுங்க

திண்டுக்கல்:'வளர்ப்பு நாய்களை 'பார்வோ', 'டிஸ்டெம்பர்' நோய்கள் தாக்குவதால் நாய் வளர்ப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என கால்நடைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பருவ நிலை மாற்றத்தால் நாய்களை 'பார்வோ'நோய் தாக்குகிறது.இந்நோய் தாக்கினால் நாய்களுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, ரத்த கழிச்சல் ஏற்படும். குறைந்தது 7 நாட்களில் சரியாகிவிடும். இதேபோன்று 'டிஸ்டெம்பர்' எனும் வைரஸ் நாய்களை தாக்கும்.நோய் தாக்கும் நாய்கள் உணவு உண்ணாமல் சோர்ந்து இருக்கும். நரம்பு மண்டலம் பாதித்து இறக்க நேரிடும்.

எனவே அறிகுறி தென்பட்டவுடன், நாய்களுக்கு சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம். நாட்டு நாய்களை இந்நோய் தாக்குவதில்லை. கலப்பின நாய்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதால் அவற்றை இந்நோய் விரைவில் தாக்கும்.

இணை இயக்குனர் முருகன் கூறுகையில்,''நாய் வளர்ப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதிப்படைந்த நாய் கடித்தாலும் நோய் பரவும். நாய் வளரும் இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். ஆண்டுதோறும் தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவமனையில் இலவசமாக போடப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X