பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி நிவாரணம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:தமிழகத்தில், 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா நிவாரணம், 1,000 ரூபாயை, வீடு தேடிச்சென்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு, வழக்கமான உதவித்தொகை மற்றும் பராமரிப்புத்தொகை மட்டும், அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அவர்கள் வருவாயின்றி தவிப்பதால், கொரோனா நிவாரணமாக, 1,000 ரூபாய் வழங்கப்படுமென, தமிழக முதல்வர் அறிவித்தார்.வங்கி கணக்கு மூலம் வழங்காமல், அவரவர் வீடு தேடிச்சென்று, 1,000 ரூபாய் நிவாரண தொகையை வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்துள்ளவர்கள்,வீடு தேடி வரும் அலுவலரிடம், அடையாள அட்டை நகலை கொடுத்து, இரண்டு, 500 ரூபாய் நோட்டுகளாக நிவாரண தொகையை பெற்று கொள்ளலாம்.மாவட்டத்தில் உள்ள பட்டியல், தாலுகா வாரியாக பிரித்து, தாசில்தாரிடம் வழங்கப்படும்; அவர்கள், கிராமம் வாரியாக பிரித்து, வி.ஏ.ஓ.,கள் வாயிலாக, நிவாரண உதவி அளிக்க வழிகாட்டுதல் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X