பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எஸ்.எம்.இ., வரையறை தொழில் துறையினர் மகிழ்ச்சி 

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:குறு, சிறு, நடுத்தர நிறுவன வகைப்பாட்டுக்கான, வழிகாட்டுதல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.முதலீடு மற்றும் விற்று முதல் அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான புதிய வரையறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.ஒரு கோடி முதலீடு மற்றும் ஐந்து கோடி ரூபாய் வரை ஆண்டு வர்த்தகம் உள்ளவை, குறு நிறுவனங்கள்; 10 கோடி முதலீடு, 50 கோடி ரூபாய் வர்த்தகம் உள்ளவை, சிறு நிறுவனங்கள்; 50 கோடி வரை முதலீடு, 250 கோடி ரூபாய் வர்த்தகம் உள்ளவை நடுத்தர நிறுவனங்களாக வகைப்பாடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறை, ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது. புதிய வரையறைக்கான விரிவான விளக்க அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கான பதிவு, ஜூலை 1ம் தேதி முதல் துவங்குகிறது.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறுகையில், ''உலகளாவிய சந்தையில் நிலவும் வர்த்தக போட்டிகளை எதிர்கொள்வதற்கு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய சக்தி அளிக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை துறையில், இளம் தொழில் முனைவோர் வருகை அதிகரிக்கும். அதிக வேலை வாய்ப்பு அளிப்பது, உற்பத்தி என, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு, குறு, சிறு நிறுவனங்களே முதுகெலும்பாக உள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து, நிறுவனங்கள் விரைவாக மீள்வதற்கு இந்த சீர்திருத்த நடவடிக்கை உந்துசக்தியாக அமையும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X