பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு: புது இணையதளம் துவக்கம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனாவை தடுக்கும் நோக்கில், பொதுமக்கள், 'புதிய இயல்பு'க்கு தயாராகும் வகையிலான, விழிப்புணர்வு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தடுக்க, சமூக இடைவெளி, கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் எச்சில் துப்புவது தவிர்த்தல் போன்றவற்றை, பொதுமக்கள், தங்கள் பழக்கமாக்கி கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புதிய இயல்பை புரிந்துகொள்ளும் வகையில், மத்திய அரசின் 'நிடி ஆயோக்' சார்பில், புதிய இணையதளம்(http://www.covidthenewnormal.com): துவங்கப்பட்டுள்ளது.இதில், இடம்பெற்றுள்ள 'பரஸ்பரம் நம்பிக்கை கொள்ளுங்கள்; கொரோனா வைரஸ் மீது அல்ல', 'பார்க்க சுத்தமாக இருப்பது மட்டும் சுத்தமல்ல' உள்ளிட்ட வாசகங்கள், ஈர்க்கின்றன. இதில், பொது போக்குவரத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.பொது இடங்களில் பயன்படுத்துவதற்கேற்ப போஸ்டர்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. சத்தான உணவு முறைகள் குறித்தும், விளக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X