பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சிலவரிகளில்... திண்டுக்கல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

32 பேர் டிஸ்சார்ஜ்

திண்டுக்கல்: - இங்கு அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் குணமடைவோர் எண்ணிக்கையும்
கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, கடந்த 2 நாட்களில் 15 ஆண்கள், 8 பெண்கள், 6 சிறுவர், சிறுமிகள், 3 முதியவர்கள் என 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இயற்கை விவசாய ஆர்வலர்களே

சின்னாளபட்டி: பசுமை வாசல் அறக்கட்டளை நிர்வாகி கோகுல்நாத் கூறியதாவது: மனிதன் உயிர்வாழ நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய தேவையாக அமைந்துள்ளது. இதற்கு இயற்கை உணவு முறையை பலரும் மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதில் ஆர்வமுள்ளவர்களுக்காக, இயற்கை விவசாயம் தொடர்பான கருத்தரங்கம் ஜூலை 11ல் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.
சிறுதானியம், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி தொடர்பான இக்கருத்தரங்கில் பொதுமக்கள்
பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 88389 31507ல் அழைக்கலாம், என்றார்.

கள்ளிமந்தையத்தில் ஆக்கிரமிப்பு

கள்ளிமந்தையம்: இவ்வூர் வழியாக பழநி, தாராபுரம் வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் அதிகமாக வந்து செல்வதால் பல கடைகள் முளைத்துள்ளன. இங்குள்ள பழநி ரோடு பஸ்ஸ்டாப்பில், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பயணிகளால் இந்த நிழற்கூரையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

விபத்தில் பெண் பலி

வேடசந்துார்: அய்யப்பன் நகரை சேர்ந்த ராமசாமி மனைவி தனலட்சுமி 50.இவர்,தனியார்
பஸ்சில், சொந்த ஊரான பெரிபட்டி சென்றார். பஸ்ஸ்டாப்பை நெருங்கியபோது எழுந்தவரின் கையில் இருந்த பாத்திரம் தவறி விழுந்தது. அதை எடுக்க முயன்றுகீழே விழுந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பலனின்றி இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

இருவர் பலி

வேடசந்துார்: கல்வார்பட்டி ஊராட்சி காசிபாளையத்தை சேர்ந்த அய்யனார் மகன் ராஜா 35. தொழிலாளி. இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூரில் வசிக்கிறார். இரு நாட்களுக்கு முன், ராஜா காசிபாளையம் வந்தார். காசிபாளையம் வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். வேட்டி, சட்டை அணிந்துள்ள இவர், பையில் மாத்திரைகளை வாங்கி வைத்துள்ளார். இறந்தவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X