சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டாக மாறும் அரசு மகளிர் கல்லுாரி

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு கலைக்கல்லூரியை கொரோனா வார்டாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டுகல்லில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அரசு மருத்துவமனை மற்றும் வட்டார அளவிலான மருத்துவமனைகளில் சிகிச்சை நடந்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்கான படுக்கை வசதிகளின் தேவையும் அதிகமாகிறது.

எனவே, திண்டுக்கல் எம்.வி.எம்., அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கொரோனா வார்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200 படுக்கை வசதிகளுடன் வார்டு தயாராகிறது. இதையொட்டி இங்கு செயல்பட்டு வந்த காய்கறி மார்கெட் நத்தம் ரோடு ஐ.டி.ஐ வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X