உள்ளாட்சி பிரதிநிதிகளிடயே மோதல் வளர்ச்சி பணி பாதிக்கும் அபாயம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இம்மலைப்பகுதியில் 15 ஊராட்சிகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றனர். அவர்கள் மக்களின் அடிப்படை பிரச்னைகளில் ஆர்வம் காட்ட தொடங்கிய போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.சுகாதார பணிகள் மற்றும் குடிநீர் சப்ளையில் ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அக்கறை காட்டிய போது, இவர்களுக்குள் கருத்து வேறுபாட்டால் யார் அதிகாரம் மையம் என்ற சூழல் உருவானது.

அ.தி.மு.க., தி.மு.க., தலைவர், கவுன்சிலர்கள் அங்கம் வகிக்கும் ஊராட்சிகளில் இப்பிரச்னை உள்ளது.ஊராட்சிகளிலும் போதிய நிதி ஆதாரமில்லாத சூழலில் நிர்வாகிப்பது சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் தங்களை அழைப்பதில்லை, திட்டங்கள் குறித்து தலைவர்கள் தங்களை கலந்து ஆலோசிப்பதில்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையை கட்சி தலைமை வரை எடுத்து சென்றுள்ளனர். இதுபோன்ற மோதலால் உள்ளாட்சி வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X