இ-பைக்கில் பயணம் செய்வது இனிமையே!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இ-பைக்'கில் பயணம் செய்வது இனிமையே!

Added : ஜூன் 28, 2020
Share

-சேதுராமன் சாத்தப்பன்- பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஆபத்பாந்தவனாக இருப்பது, எலக்ட்ரிக் வாகனமே. குறிப்பாக, பொருட்களை வீடுகளில் டெலிவரி செய்யும் வேலையில் இருப்போருக்கு, எரிபொருள் செலவு அதிகம். எனவே, மாதத்துக்கு, 7,000ம் ரூபாய் சேமிக்க வழி வகை செய்யும் விதத்தில், ஒரு 'இ-பைக்' கம்பெனி, ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.'eBikeGo' என்ற இந்த கம்பெனி, 2017ல், 640 இ--பைக், 2019 துவக்கத்தில், 18 ஆயிரம் விற்றுள்ளது. இவர்களின், 'இ-பைக்'கில், ஒரு கி.மீ.,க்கு ஆகும் செலவு, 20 பைசா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 200 கிலோ எடை வரை உள்ள பொருள் ஏற்றி செல்லலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 140 கி.மீ., வரை ஓட்டலாம்.'கோவிட்-19' முடிந்து பலரும் அலுவலகங்களுக்கு பயணிக்க வேண்டிய சூழல் வரும்போது, கூட்ட நெரிசல் உள்ள பேருந்து, ரயில், ஆட்டோவில் பயணம் செய்வதை தவிர்த்து, 'இ-பைக்கில்' செல்லலாம். இந்தியாவில், மூன்று கோடி இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. அவற்றில் 0.1 சதவீதமாவது, 'இ-பைக்' ஆக, அடுத்த ஒரு ஆண்டில் மாற்ற வேண்டுமென்பதே, இவர்களின் குறிக்கோள்.தமிழகத்தில், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில், இதுபோல், 'இ-பைக்' தயாரிக்கப்படுகிறது. அவர்களும், இதுபோன்ற மாடலை அறிமுகப்படுத்தும் போது, அவர்களின் விற்பனையும் அதிகரிக்கும். நாடும் சுத்தமாகும்; பர்சும் கனமாகும். சிக்கனமும், சுகாதாரமும் தானே நாட்டுக்கு இப்போது உடனடியாக தேவை.சந்தேகங்களுக்கு: sethuraman.sathapapn@gamil.com, www.startupbusinesnews.com. 98204 51259.'டிஜிட்டல் ப்ளாட்பார்ம்'இறக்குமதி, ஏற்றுமதி எண் (Importer Exporter Code - IEC) பெறுவதற்கு, வரும், ஜூலை 13 முதல், தனியாக ஒரு 'டிஜிட்டல் ப்ளாட்பார்ம்' துவக்கப்படும். இறக்குமதி, ஏற்றுமதி முடிவு, அதில் மாறுதல்கள், இறக்குமதிக்கான லைசென்ஸ் தேவைகளுக்கு அப்ளை செய்ய, ஏற்றுமதி, இறக்குமதி பாலிசி பற்றி அறிய, இந்த 'டிஜிட்டல் ப்ளாட்பார்ம்' உதவி புரியும். இந்த சேவை www.dgft.gov.in இணையதளத்தில் கிடைக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X