சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி., அலுவலக ஊழியருக்கு கொரோனா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கோவை:கோவை எஸ்.பி., அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை எஸ்.பி., அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில், 30 வயது பெண் அமைச்சு பணியாளர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து, அவர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், சமீபத்தில், திண்டுக்கல் மாவட்டம், பழநி சென்று வந்ததாக தெரியவந்துள்ளது. எஸ்.பி., அலுவலகத்தின் இரண்டாம் தளம் கிருமிநாசினி தெளித்து, துாய்மைப்படுத்தப்பட்டது. அவருடன் பணியாற்றிய மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X