தமிழ்நாடு

மந்தம் ரேஷனில் மளிகை பொருட்கள் விற்பனை: புழு,வண்டு தாக்குதலால் வீணாகி்றது

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு விற்பனைக்காக ரேஷன் கடைகளுக்கு வினியோகித்த மளிகைப் பொருள் புழு, வண்டு தாக்குதலால் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது.

ஊரடங்கு சூழலில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மார்ச் முதல் மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது. மளிகைப் பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்பை தவிர்க்க, 19 வகையான பொருட்கள் மலிவு விலையில் வினியோகிக்கப்பட்டன. இதற்காக, கடைதோறும் ரூ.ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மதிப்பில், பொருட்கள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு தளர்வால், வெளிமார்க்கெட் விற்பனையில் தாராளமாயமாகி விட்டது. இதனால், ரேஷனில் வழங்கிய பொருட்கள் தேக்கமடைந்தன. ரூ.ஆயிரக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் புழு, வண்டு தாக்குதலால் பாதித்துள்ளன. ரேஷன் விற்பனையாளர்கள், அப்பொருட்களுக்கான தொகையை செலுத்த அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், ''குறித்த நாளுக்குப்பின் மளிகைப் பொருட்கள் கெட்டு புழு, வண்டு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் தேக்கமடைந்த பொருட்களை அதிகாரிகள் திரும்பப்பெற மறுக்கின்றனர். விற்பனையாகாத பொருளுக்கும் பணம் செலுத்த வற்புறுத்துவதால் செய்வதறியாமல் உள்ளோம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X