சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வத்தலக்குண்டில் சமூக தொற்றா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டில் கொரோனா பாதித்தோரின் உறவினர்களுக்கும் தொற்று உறுதியானதால் சமூக பரவலாகி விட்டதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

வத்தலக்குண்டில் நேற்று முன் தினம் 50 வயது பெண்ணிற்கு தொற்று உறுதியானது. நேற்று அவருடைய 16 வயது மகள், 50 வயது அண்ணன் ஆகியோருக்கு உறுதியானது. பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதால் சமூக பரவல் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.

கர்ப்பிணிக்கு கொரோனா

எழுவணம்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்ததால் சென்னையிலிருந்து 3 மாதத்திற்கு முன்பு எழுவணம்பட்டி மாமியார் வீட்டில் விட்டுச் சென்றார். கடந்த 24ல் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. அவரது வீட்டில் இருந்த தந்தை, தங்கை ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X