காங். செயற்குழு தேர்தல்: சஞ்சய் ஜா போட்டியிட முடிவு

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ''காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தப்பட்டால், நிச்சயம் போட்டியிடுவேன்,'' என, கட்சியின் மூத்த தலைவர், சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர், சஞ்சய் ஜா. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இவர், சமீபத்தில், ஆங்கில நாளிதழ் ஒன்றில், கட்டுரை எழுதிஇருந்தார்.அதில், 'காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை சீர் செய்வதில், அசாதாரண
காங். செயற்குழு தேர்தல்:  சஞ்சய் ஜா போட்டி, முடிவு, Sanjay Jha, contest, Congress, polls, top body, election, cong, senior congress leader

புதுடில்லி: ''காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தப்பட்டால், நிச்சயம் போட்டியிடுவேன்,'' என, கட்சியின் மூத்த தலைவர், சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர், சஞ்சய் ஜா. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இவர், சமீபத்தில், ஆங்கில நாளிதழ் ஒன்றில், கட்டுரை எழுதிஇருந்தார்.அதில், 'காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை சீர் செய்வதில், அசாதாரண மந்தநிலை மற்றும் குழப்பம் நிலவுகிறது. 'இதை உணர முடியாத தலைவர்கள் பலர், கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். காந்திய சிந்தனை மற்றும் நேருவின் கண்ணோட்டத்தை உயிர் மூச்சாக கொண்டுள்ள என்னை போன்றவர்களுக்கு, கட்சி சிதைந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது' என, கூறியிருந்தார்.


latest tamil news
அவரின் இந்த கட்டுரை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சஞ்சய் ஜாவை நீக்கி, கட்சி தலைவர், சோனியா உத்தரவிட்டார். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவராக, ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என, கட்சியில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், கட்சி தலைவர் பொறுப்பை, ராகுல் விரைவில் ஏற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சஞ்சய் ஜா கூறியதாவது:காங்கிரஸ் கட்சியின் செயற்குழு தேர்தல் எப்போது நடந்தாலும், அதில் நான் போட்டியிடுவேன். இதில், எந்த சந்தேகமும் இல்லை.
நேருவின் கொள்கைகளை உறுதியாக கடைப்பிடிக்கும் நான், கட்சியை வலுவடைய செய்வதில் முக்கிய பங்கு வகிப்பேன். பா.ஜ.,வுக்கு எதிராக, கட்சியை பலமாக்குவேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
28-ஜூன்-202008:24:44 IST Report Abuse
Chandramoulli 2014 மற்றும் 2019 தேர்தலில் எதிர் கட்சி தலைவர் பதவியை கூட காங்கிரஸ் கட்சியினால் பெறமுடியவில்லை . தேர்தல் தோல்வியை வெளிப்படையாக விமர்சித்ததின் விளைவு பதவி நீக்கம் . காங்கிரஸ் அழிவு பாதையை நோக்கி சென்று விட்டது
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-ஜூன்-202006:31:41 IST Report Abuse
Cheran Perumal விரைவில் இவரை கட்சியை விட்டே வெளியேற்றுவார்கள்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-ஜூன்-202006:10:24 IST Report Abuse
Indhuindian ஐயோ பாவம் இவ்வளவு வெள்ளேந்தியா இருக்கறாரே இத்தனை காலம் காங்கிரஸ்க்கு முட்டு கொடுத்துக்கிட்டு இருந்தாரே அங்கே என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரியாதா? இல்லே தெரியாத மாதிரி ஆக்ட் குடுக்கறார்? காங்கிரெஸ்ட்லெ உள் கட்சி தேர்தலா? அது சும்மா தேர்தல் கமிஷன் கண்ணுலே மொளகாப்பொடியை தூவரதுக்காக நடக்கும். கொஞ்சநாளைக்கு முன்னாலே ராகுல் காந்திக்கு எதிரா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி போடப்போறேன்னு சொன்னவர் இப்போ எங்கே இருக்காருன்னே தெரியல? இவர் எதுக்கு இப்படி சவுண்ட் குடுக்கறாரு
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜூன்-202012:13:14 IST Report Abuse
madhavan rajanMany persons in congress may be thinking on these lines but only a very few like him has expressed ly. He had only given suggestions to the leaders that they should conduct meeting with interactions between leaders and the spokespersons explaining the strategy to be followed in facing the criticism against the congress party and its leaders. Party should have ly told that his suggestion will be considered at the appropriate time. Removing him had exposed the party that there is no inner party democracy and they do not want to hear any suggestion not favoring them....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X