ரூ. 7 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்; பொள்ளாச்சியில் குடோனுக்கு சீல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 7 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்; பொள்ளாச்சியில் குடோனுக்கு 'சீல்'

Added : ஜூன் 28, 2020
Share
 ரூ. 7 லட்சம்  புகையிலை பொருள் பறிமுதல்;  பொள்ளாச்சியில் குடோனுக்கு 'சீல்'

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட, 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பழனியப்பா நகரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்து இருப்பதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.குடோனில், மூட்டை, மூட்டையாக, புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். விசாரணையில், சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கடலை மிட்டாய் வியாபாரி காஜா செரீப், 36, திருச்சியில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. பின், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:பொள்ளாச்சி பழனியப்பா நகரில், ஸ்ரீகாந்த் என்பவருக்கு சொந்தமான குடோனில், காஜாசெரீப் கடந்த மூன்று மாதங்களாக ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, பொள்ளாச்சி பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார். ஏழு லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 36 மூட்டைகளில், 600 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.ஆய்வு அடிப்படையில், குற்ற வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு, 94440 42322 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு மக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.விசாரணை தேவை! மொத்த விலைக்கு வாங்கும் புகையிலை பொருட்களை, சில்லரை விற்பனையில் விற்று லாபம் பார்ப்பதால், இதை பலரும் மறைமுக தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திருச்சியில் இருந்து பொள்ளாச்சிக்கு எப்படி கொண்டு வரப்பட்டது என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இது குறித்து விசாரித்து, தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X