பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான் குளம் சம்பவம் :முதல்வருக்கு கோரிக்கை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

பேரூர்:பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த, 340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள், நேற்று வழங்கப்பட்டன.தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு, ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், பா.ஜ.,வினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.நிவாரண பொருட்களை வழங்கி, நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''கொரோனா பாதிப்பை பொறுத்து, ஊரடங்கை அமல்படுத்தி கொள்வதற்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு அதிகாரம் வழங்கியுள்ளது. சாத்தான் குளம் சம்பவம் வேதனை அளிக்கிறது. ஒரு சிலரின் நடவடிக்கையால், ஒட்டுமொத்த போலீசாருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி பெற்று தர வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X