பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று: பாதிப்பு 428 ஆக உயர்வு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், மார்க்கெட் வியாபாரி, அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் உட்பட ஒரே நாளில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் செயல்படும் எம்.ஜி.,ஆர் மார்க்கெட்டில், ஏற்கனவே மூன்று வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 46 வயது நபருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பூ மார்க்கெட்டை சேர்ந்த 36 வயது பெண், கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும், 22 வயது பெண் என இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குனியமுத்துாரில் தனியார் மருத்துவமனை பெண் டாக்டர், கோவை, சூலுாரை சேர்ந்த 16 வயது பெண், கே.கே.புதுாரை சேர்ந்த 26 வயது பெண், காமராஜர் வீதி கே.கே.புதுாரை சேர்ந்த 23,45,48 வயது ஆண், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண், உட்பட மொத்தம், 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்கள், கோவை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 393ல் இருந்து, 428 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவில் இருந்து மீண்ட 43 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது, 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X