பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, மதுரை மாவட்டங்களில் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை, மதுரை மாவட்டங்களில் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, complete lockdown, curfew, lockdown in tn, Kanchipuram, Chengalpattu

சென்னை :சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. போலீஸ் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால், மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்.

சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 19ம் தேதி முதல், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.


latest tamil news
அதன்பின், மதுரை, தேனி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை, மதியம் வரை செயல்படலாம் என்பது உட்பட, சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, அப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காய்கறி, மளிகை கடை என, எந்த கடைகளும் திறந்திருக்காது; வாகனங்கள் எதுவும் இயங்காது.

தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அரசு உத்தரவை மீறி, வெளியில் வருவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் வீடுகளிலே இருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
28-ஜூன்-202011:15:46 IST Report Abuse
CHINTHATHIRAI stat at home please. Many numbers of Nurses and Doctors are working for the public welfare by sacrificing their family. Social Distancing has to be followed in front of Court premises and in Police station. Like time bounded hearing in court, Police enquiry in station has to be followed. We can help only at staying at our home. Very difficulty in identifying the source of spread of covid-19. Stay home, save future generations from covid19
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
28-ஜூன்-202008:25:48 IST Report Abuse
Chandramoulli மக்கள் மனது வைத்தால் தான் நோய் குறைய வாய்ப்பு .
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
28-ஜூன்-202002:28:32 IST Report Abuse
Baskar தளர்வின்றி ஊரடங்கு சட்டம் வரவேற்க தக்கது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு கைது செய்து உடனே ஜாமினில் விடுதலை செய்ய கூடாது. அவர்களையும் பதினான்கு நாட்கள் தனிமை படுத்த வேண்டும். அப்போதாவது திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கோரோனோவும் கொஞ்சம் குறையும். எல்லாமே மக்கள் கையிலும் போலீசார் கையிலும் தான் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X