சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., மனைவிக்கு கொரோனா: திருப்பூரில் போலீஸ் ஸ்டேஷன் மூடல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 எஸ்.ஐ., மனைவிக்கு கொரோனா: திருப்பூரில் போலீஸ் ஸ்டேஷன் மூடல்

திருப்பூர்:சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் எஸ்.ஐ.,க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் கணவர் பணியாற்றி வரும் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.ஐ., ஒருவர், போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி சென்னை 'சிட்டி'யில் எஸ்.ஐ., யாக உள்ளார். 24ம் தேதி சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்தார்.
மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால், அவரது வீட்டில் உள்ள எஸ்.ஐ,. கணவர், மகள், மாமனார், மாமியார் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். போலீஸ் குடியிருப்பு 'பேரிகார்டு' வைத்து, 'சீல்' வைக்கப்பட்டது. அவரது கணவர் பணியாற்றி வரும் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் உட்பட ஒருங்கிணைந்த வளாகம், போலீஸ் கேண்டின் மூடப்பட்டது.போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்பு, கோர்ட் வளாகம், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உட்பட அனைத்து பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X