சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி மனைவிக்கு கொரோனா: மருத்துவமனைக்கு 'சீல்'

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி  மனைவிக்கு கொரோனா: மருத்துவமனைக்கு 'சீல்'

கோவை:'புதிய தமிழகம்' கட்சி நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மருத்துவமனை மூடப்பட்டது.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சந்திரிகா, 60. கோவை, குனியமுத்துார் திருவள்ளுவர் நகரில் குடியிருந்து வருகின்றனர். இருவரும் டாக்டர்கள் என்பதால், இப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சந்திரிகாவுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள், இருந்து வந்தது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொற்று எப்படி வந்தது என்பது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வீடு மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகள் முழுவதும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, துாய்மைப்படுத்தப்பட்டது. சுகாதாரத் துறை அறிவுரையை தொடர்ந்து, அவரது மருத்துவமனை மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
28-ஜூன்-202008:02:20 IST Report Abuse
Srinivasan Rangarajan டாக்டர்களுக்கு தொற்று நோய் என்பது தொழில்முறை இடர் (occupational hazard)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X