பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்று ஒழிய ஏழுமலையானிடம் பிரார்த்தனை ; சிவராஜ்சிங் சவுகான்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

திருப்பதி : உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஒழியவும், நாட்டின் பாதுகாப்பிற்காக ஏழுமலையானிடம் வேண்டுதல் நடத்தியதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.latest tamil news
ஏழுமலையானை தரிசிக்க நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு தன் குடும்பத்துடன் திருமலையை அடைந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.முதலில், அதிகாரிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்கிய பின் மலர்செண்டு அளித்தனர். இரவு திருமலையில் தங்கிய முதல்வர் குடும்பத்தினர் நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தனர். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்டு கோவிலை விட்டுவெளியில் வந்த அவர் நாதநீராஜன மண்டபத்தில் நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தில் குடும்ப சமேதமாக பங்கேற்றார்.


latest tamil newsபின்பு அவர் கூறியதாவது, 'நாடு மிக முக்கியமான இரு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. முதலில் கட்டுக்கடங்காமல் பெருகி வரும் கொரோனா தொற்று. இரண்டாவது எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல்.இவைகளிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காத்தருள வேண்டும் என்று ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தேன்.சுந்தர காண்ட பாராய ணம் பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியபடுத்தும். அதனால், அதில் கலந்து கொண்டது மனதிற்கு நிறைவாக உள்ளது' என்று கூறினார்.


latest tamil news
பின்னர் அகண்டம் அருகில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்பித்தார். ஜபாலி சென்று ஆஞ்சநேயரை குடும்பத்துடன் வழிபட்டார். பின்பு திருச்சானுார்சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து தாயாரின்பிரசாதங்களை பெற்றுக் கொண்டு அவர் மத்திய பிரதேசம் புறப்பட்டார்.


latest tamil news
கொரோனாவிற்கான பொது முடக்கத்திற்கு பின் வெளி மாநிலத்திலிருந்து ஏழுமலையானை தரிசிக்க வந்த முதல் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-ஜூன்-202009:54:30 IST Report Abuse
skv srinivasankrishnaveni EN POLA PALARUM INTHA அரக்கனைஒழிக்கவேண்டும் பெருமாளே என்று நேர்ந்துண்டு தினம் சஷ்டி கவசம் /விஷ்ணுசஹஸ்ரநாமம் / அனுமன் சாலிசா என்று சொல்றோம் தன்வந்திரி ஸ்லோகம் சொல்றோம் பெருமாளே ப்ளீஸ் கண் திறங்க இந்த அரக்கனை உலகை விட்டு துரத்தி அளிக்கவேண்டும் என்று விடுகிறோம் உடன் இந்த ஏவியவனையும் எந்த கடவுளும் பாவம் பாக்காமல் அடியோடு ஒழிக்கவேண்டும் என்று கெஞ்சுகிறோம்
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
28-ஜூன்-202008:23:39 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அவரது விருப்பம்
Rate this:
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
28-ஜூன்-202007:40:21 IST Report Abuse
Ramachandran Rajagopal அரசியல் வாதிகள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வதோடு நில்லாமல் நேர்மையாக வஞ்சகமற்ற ஆட்சி நடத்தினால்தான் தீய சக்திகளின் தாக்கம் குறையும். உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு மக்களை கவருவதற்காக மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன் என்பது ஏமாற்று வேலை ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X