சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்று மணல் திருட்டு மாட்டு வண்டி பறிமுதல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : அனுமதியின்றி மாட்டு வண்டியில் ஆற்றுமணல் கடத்திச் சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கச்சிபெருமாநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல், 43; அனுமதியின்றி, மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பழனிவேலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X