பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிர் காப்பீட்டு பதிவு விழிப்புணர்வு முகாம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

மரக்காணம் : கிளியனுார் அடுத்த புதுக்குப்பத்தில் நெற்பயிர்களுக்கான பயிர் காப்பீட்டு பதிவு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு, வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.விவசாயிகளிடையே பேசிய சரவணன், 'சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து பாதுகாத்திட ஒவ்வொரு விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்திடும் நெற்பயிர் வெள்ளம், வறட்சி, பூச்சி, நோய் தாக்குதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும்.

மேலும், பயிர் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல், ஆதார், வங்கிக் கணக்கு புத்தக நகல், இரண்டு புகைப்படம் ஆகியவைகளை பொது சேவை மையத்தில் கொடுத்து ஒரு ஏக்கருக்கு 568 ரூபாய் பிரீமியம் கட்டவேண்டும். மானியத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்கவும் அரசு மானியம் வழங்குகிறது' என்றார்.முகாமில், வேளாண்மை அலுவலர் ரேவதி, துணை வேளாண்மை அலுவலர் குமார், ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மராஜ், உதவி வேளாண்மை அலுவலர் தங்கம், உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரமணி, பயிர் அறுவடை அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X