பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் பி.சி.ஆர்., இயந்திரங்கள் வழங்க கோரிக்கை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கடலுார் : கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பரிசோதனைக்காக கூடுதலாக இரண்டு பி.சி.ஆர்., இயந்திரங்கள் வழங்க வேண்டும் என, மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து கொரோனா கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடியிடம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அளித்துள்ள மனு:மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவான வியாதிகளுக்கு சிகிச்சை பெற சிதம்பரம் மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவ மனைகளில் ஏற்பாடு செய்ய வேண்டும்.மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதியிலும் பரவலாக பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும், கூடுதலாக இரண்டு பி.சி.ஆர்., இயந்திரங்களை மாவட்டத்திற்கு வாழங்க வேண்டும்.

தகவல் சேகரிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு நலவாரியம், நலவாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், கடன் கட்ட கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் ஊரடங்கால் பாதித்த விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். குடிமராமத்து பணிகளை முறையாக செய்வதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தேவையான விவசாய கடன்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும் .ேரஷன் கடைகள் மூலமாக முகக் கவசம், சானிடைசர், கபசுர குடிநீர் நிலவேம்பு கசாயம் இலவசமாக அரசு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X