சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு இல்லாமல் மயில்கள் இறப்பு அதிகரிப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் மயில்கள் இறப்பது அதிகரித்துள்ளது.

சேத்தியாத்தோப்பு, ஆணைவாரி, எறும்பூர், வளையமாதேவி, தர்மநல்லுார், கத்தாழை, விளக்கப்பாடி, அள்ளூர், வீராணம் ஏரியின் மேல்கரை உள்ளிட்ட இடங்களில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் இறைக்காக, அருகில் வயல்வெளிகள் மற்றும் ஏரி பகுதிகளுக்கு செல்கின்றன. அப்போது நாய்கள் மற்றும் மரநாய்கள் தாக்கி இறக்கின்றன. சில மயில்கள் வயல்களில் எலிகளுக்கு வைக்கும் விஷ மருந்து கலவைகளை சாப்பிட்டு இறக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே மயில்களின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், சிதம்பரம் சரகத்தில் உள்ள வனத் துறையினர் கண்டு கொள்ளாததால், மயில்கள் இறப்பது அதிகரித்து வருகிறது.

மயில்கள் அதிகளவில் வசிக்க கூடிய பகுதியில் தண்ணீர் தொட்டி கூட வனத்துறையினர் அமைத்து தரவில்லை. தேசிய பறவை மயில் இறப்பு அதிகரித்து வருவது இப்பகுதி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.வனச்சரகத்தினர் ஆய்வு செய்து, மயில்கள் வசிக்கும் பகுதி என தகவல் பலகைகள் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X