சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கம்மாபுரம் : கம்மாபுரம் அருகே கொரோனா பரவலை தடுக்காத நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

கம்மாபுரம் அடுத்த தெற்கிருப்பு கிராமத்தில் ஒரு ஆண், மூன்று பெண்கள், ஒரு ஆண் குழந்தை, சென்னையில் பணியாற்றி, வீடு திரும்பினர். இவர்களுக்கு நேற்று முன்தினம் செய்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியாகி, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதாரத் துறையினர், கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ள ஊராட்சிகளில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கிருப்பு கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக செய்யவில்லை எனக் கூறி, 10க்கும் மேற்பட்டோர், அரசியம்மன் கோவில் பஸ் நிறுத்ததில் மாலை 5:00 மணியளவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த ஊ.மங்கலம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். இதனால், இச்சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X