பொது செய்தி

தமிழ்நாடு

இரு சக்கர வாகன மானியம் அமைச்சர் வழங்கினார்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுாரில் அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியத் தொகையை அமைச்சர் சம்பத், பயனாளிகளுக்கு வழங்கினார்.

கடலுார் ஊராட்சி ஒன்றியத்தில் 2019-20ம் ஆண்டிற்கு அம்மா இருசக்கர வாகன வழங்கும் திட்டத்தில் 125 பயனாளிகளிடம் இருந்து மானியம் அனுமதிக்கக் கோரி விண்ணப்பங்கள் வரப்பெற்றது.இதில், 115 பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கும் நிகழ்ச்சி கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார்.அமைச்சர் சம்பத், பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கி, பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும்'என்றார்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, ஒன்றியக்குழு சேர்மன் பக்கிரி, நகர துணை செயலர் கந்தன், விவசாய அணி காசிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X