சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகாரட்சி ஊழியர்கள் மீது அவதுாறு கடலுார் கமிஷனர் போலீசில் புகார்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கடலுார் : நகராட்சி ஊழியர்கள் மீது சமூக வலைதலத்தில் அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலுார் நகராட்சி கமிஷனர் ராமூர்த்தி, புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் அளித்த மனு; கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடலுார் நகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா அறிகுறியாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து, பரிசோதனைக்கு அனுப்ப, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நகரில் உள்ள 50 ஆயிரம் வீடுகளில் 200 வீடுகளுக்கு ஒருவர் என, தற்காலிக பணியாளர் நியமித்து, கணக்கெடுத்து வருகின்றனர். ஒரு வாட்ஸ் ஆப், குழுவில், நகராட்சி ஊழியர்கள் என்று யார் வந்தாலும் வீ்ட்டிற்குள் அனுமதிக்காதீர்கள், செயின் பறிப்பு செய்கிறார்கள்; கவனமாக இருங்கள்.

புதுப்பாளையத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாக வதந்தி பரப்பியுள்ளனர். இதனால், பணியாளர்கள் பணிக்கு வர தயங்குவதுடன், மக்களும் ஒத்துழைப்பு அளிக்க தயங்குவர். கொரோனா கணக்கெடுப்பில், பின்னடைவு ஏற்பட்டு, நோய் அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.எனவே, நகராட்சி ஊழியர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X