இந்தியா

ஓவராக குடித்தவர் நாக்கு வறண்டு பலி

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

வில்லியனுார் : அளவுக்கு அதிகமாக குடித்தவர் நாக்கு வறண்டு இறந்தார்.

வில்லியனுார், சுப்ரமணியசிவா நகரை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் ராஜ்குமார்,33; இவரது மனைவி தமிழ்செல்வி. திருமணமாகி 10 ஆண்டாகும் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக தமிழ்செல்வி தனது கணவரை பிரிந்து மகளுடன் வீராம்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.மனைவி குடும்பம் நடத்த வராததால் விரக்தியடைந்த ராஜ்குமார், குடிப்பழக்கத்திற்கு அடிமையானர்.நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து படுத்தவர், துாக்கத்திலேயே நாக்கு வறண்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது தாய் உன்னிதமேரி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X