சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ் வழித்தடம் குறைப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கடலுார் : கொரோனா தொற்றையொட்டி வருவாய் குறைவாக இருப்பதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்குவதை குறைத்துக்கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதை யொட்டி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், மண்டலங்களுக்குள் போக்குவரத்தை இயக்க அரசு அனுமதி அளித்தது. தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு குறைவான பயணிகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால் பஸ்களில் போதியளவு வருமானம் கிடைப்பதில்லை. வருகின்ற வருமானம் பஸ் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவே சரியாக உள்ளது. வேறுவழியின்றி தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்சை இயக்க முன்வராமல் ஷெட்டில் நிறுத்தி வைத்து விடுகின்றனர்.

குக்கிராமங்களுக்குள் செல்லும் ஒரு சில தடங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கு கிராம மக்களும் மனமுவந்து கொடுக்கின்றனர். இதனால் கடலுார் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தான் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X