இந்தியா

கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான மாஸ்க் கம்பெனி உரிமையாளர் மீது வழக்கு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவ காரணமான மாஸ்க் கம்பெனி உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தொழிலாளர்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில், சமீர் காம்ரா நடத்தி வரும் மாஸ்க் (முக கவசம் ) தயாரிக்கும் கேர் பார் லைப் கம்பெனியில், பணியாற்றி யசிலருக்கு கடந்த 4ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக கம்பெனியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கம்பெனியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி பணியாற்றி வந்தது தெரிய வந்தது. உடனடியாக கம்பெனி மூடப்பட்டு, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதுவரை மாஸ்க் கம்பெனியில் பணியாற்றிய மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் குமரன், மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.அதில், அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு காரணமாக மாஸ்க் கம்பெனி உரிமையாளர் சமீர் காம்ரா, அரசின் அனுமதியின்றி தமிழகத்தில் இருந்து வந்து பணியாற்றிய ஏ.சி., மெக்கானிக்குகள் கல்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ், கண்ணபிரான், ராஜேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரினர்.அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார், மாஸ்க் கம்பெனி உரிமையாளர் சமீர் காம்ரா மற்றும் ஏ.சி.மெக்கானிக்குகள் மூன்று பேர் எனமொத்தம் நான்கு பேர் மீது நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X