கடலில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் மீனவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு | Dinamalar

இந்தியா

கடலில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் மீனவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு

Added : ஜூன் 28, 2020
Share

புதுச்சேரி : கடலில் படகுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அனைத்து மீனவர்களுக்கும், நிபந்தனையின்றி தடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில், படகில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். கொரோனா காலத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக மீனவர்கள் வீராம்பட்டினம் விஸ்வநாதன், வம்பாக்கீரப்பாளையம் தணிகாசலம், வைத்திக்குப்பம் வீரமுத்து, குருசுக்குப்பம் எத்திராஜ் மற்றும் பலர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காங்., கட்சியினர் மீது வழக்கு: சீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு காங்., சார்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், சமூக இடைவெளி பின்பற்றாததால், நிகழ்ச்சியை நடத்திய காங். பிரமுகர் ரகுமான், சரவணன், சிபி, வீரா உள்ளிட்டோர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X