மனைவியிடம் வரதட்சணை கேட்டுகொடுமை செய்த கணவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியிடம் வரதட்சணை கேட்டுகொடுமை செய்த கணவர் கைது

Added : ஜூன் 28, 2020
Share

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவரை பண்ருட்டி மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

நெய்வேலி வட்டம்-3 வெள்ளையன்குப்பம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரேகா,29; இவருக்கும், நடுக்குப்பம் சேர்ந்த ரமேஷிற்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு ரமேஷ் வேலைக்கு செல்வதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ரமேஷ் வேலைக்கு செல்லவில்லை. பின் ரமேஷ் ரேகாவிடம் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து தகராறு செய்து வந்தார்.இதனையடுத்து ரேகா தனது தந்தையிடம் இருந்து ரூ. 4 லட்சம் வாங்கி கொடுத்தார். அதன் பிறகும் ரேகாவின் மாமியார் தெய்வானை, மாமனார் குணசேகரன் இருவரும் சேர்ந்து ரூ. 8 லட்சம் கொடுத்தால் தான் இந்த வீட்டில் வாழலாம், இல்லை எனில் விவாகரத்து வாங்கிச் செல், என கூறி அவரை அடித்து துரத்தினர்.

இது குறித்து ரேகா கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்தனர். மேலும் மாமனார் குணசேகரன், மாமியார் தெய்வானை ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X